கரூர் மாவட்டம், நெரூர் பகுதியில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விசுவநாதர், விசாலாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் பூரண நலம் பெற வேண்டி கரூர் திமுக மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு,
சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர், கோவில் வளாகத்தை சுற்றிலும் சுமார் 500 பெண்கள் தாங்கள் கொண்டு வந்த குத்து விளக்கில் எள் எண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.