அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் அரசு ஆய்வுக்கூட்டங்கள் – இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்தார். அரியலூரில் திரளாக வருகை தந்த பொதுமக்கள் அமைச்சர் உதயநிதியை வரவேற்றனர். தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து புனித ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு திருச்சி உறையூர் பிரம்மா குமாரிகள் தியான நிலையம் சார்பாக பிரம்மா குமாரி ராஜயோகனி தேவகி மற்றும் ராஜயோகினி பிரம்மா குமாரி பிருந்தா , அமைச்சர் பெருமக்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு
துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோருக்கு ராக்கி அணிவித்து இறை நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.. பிரம்மா குமார் சுந்தர்ராஜன் நன்றி தெரிவித்தார்..