புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி, சிவன்கோவில் அருகில், புதிய கலையரங்கத்தினை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) திரு.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொதுமக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றையதினம் அரிமளம் பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 இலட்சம் செலவில் புதிய கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் திரு.பொன்.இராமலிங்கம், அரிமளம் பேரூராட்சித் தலைவர் திருமதி.மாரிக்கண்ணு முத்துக்குமார், திரு.இளையராஜா, பேரூராட்சித் துணைத் தலைவர் திருமதி.கருப்பாயி வெள்ளைச்சாமி, திரு.செந்தில்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.