அமைச்சர் ரகுபதி இன்று சட்டத்துறை மானிய கோரிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையொட்டி இன்று காலை அவர் மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வழக்கறிஞர் ராமநாதன், அறந்தாங்கி நகர திமுக செயலாளர் ராஜேந்திரன், செய்யது முகம்மது, மற்றும் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆசிபெற்று சட்டமன்றத்துக்கு வந்த அமைச்சர் ரகுபதி மானிய கோரிக்கை தாக்கல் செய்தார்.
கருணாநிதி நினைவிடத்தில், அமைச்சர் ரகுபதி மரியாதை
- by Authour
