கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ‘வேர்களைத் தேடி’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்து உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான சித்தன்னவாசலுக்கு அவர்கள் வந்திருந்தனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பொன்னாடை அணிவித்து பரிசுகள்
வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு. அருணா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகி, அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் வீ. ராமசாமி, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அதிகரிகள் கலந்து கொண்டனர். வெளிநாட்டில் இருந்து வந்துள்ள இளைஞர்கள் அங்குள்ள அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.