அண்ணல் அம்பேத்கரின் பிறநதநாளையொட்டி நேற்று சென்னை கலைவாணர் அரங்கில்
சமத்துவநாள்விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ 227.85கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ மாணவியர் களுக்கான விடுதிகட்டிடங்கள்,
பள்ளிக்கட்டிடங்களுக்கு உள்கட்டமைப்புவசதி,
சமுதாய நலக்கூடங்கள்,கல்லூரி விடுதிகளில் கற்றல், கற்பித்தல் கூடம் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள், ஆகியவற்றை திறந்து வைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பயன்பெறும்வகையில் நீண்ட தூரகம்பி இல்லா இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறுதிட்டங்களில்ரூ104.75 கோடிமதிப்பிலானநலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் மாலையீட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்ஆட்சியர் மு.அருணாதலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிபங்கேற்றுபயனாளிகளுக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், துணை மேயர் எம்.லியாகத்தலி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் , வருவாய் கோட்டாட்சியர் கள் பா.ஐஸ்வர்யா (புதுக்கோட்டை ),ச.சிவக்குமார் (அறந்தாங்கி) ,
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்க. ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.