Skip to content

யாரும் கூட்டணிக்கு வரலியே……..விரக்தியில் எடப்பாடி…. அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது திருமணத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நடத்தி வைத்தார். அப்போது அமைச்சர் ரகுபதி  அளித்த பேட்டி வருமாறு:

தமிழ் தாய் வாழ்த்து என்பது தமிழக மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது .தமிழ்நாடு திராவிடம் ஆகிய இரண்டையும் யாராலும் பிரிக்க முடியாது .தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளில் திராவிடம் என்ற பெயர் உள்ளது

அதிமுகவுடன் யாரும் கூட்டணி சேர தயாராக இல்லை அதனுடைய வெளிப்பாடுதான் எடப்பாடி பழனிச்சாமியின் விரக்தி பேச்சு.
ஒரு இயக்கத்தை அழிக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது ,தலைமை பலவீனமாக உள்ளபோது அதுவே அழிந்துவிடும். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின்   தலைமை தற்போது பலவீனமாக உள்ளது ,அதன் வெளிப்பாடு தான் இந்த புலம்பல்

திமுக கூட்டணி உடைந்து விடும் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு பலிக்காது ,அவருக்கு வேறு வேலை இல்லை ,திமுக கூட்டணியை அவர் உடைக்கவும் முடியாது கொளுத்தவும் முடியாது ,எரிக்கவும் முடியாது, நசுக்கவும் முடியாது எல்லாம் அவர் சார்ந்த கட்சிக்கு வேண்டுமானால் ஏற்படும், தி.மு.கவுக்கு ஏற்படாது.திமுக கூட்டணி எந்த சூழ்நிலையிலும் உடையாது ,

தமிழக ஆளுநரை மாற்ற போவதாக வந்திருக்கும் தகவலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஆளுநரை மாற்ற வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது ,

தமிழ்த் தாய்  வாழ்த்து என்பது தமிழக மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது நிச்சயம் தமிழ்நாடு ,திராவிடம் இவை இரண்டையும் பிரிக்க முடியாது.
மத்திய இணையமைச்சர் எல் முருகனுக்கும், சீமானுக்கும் நடக்கும் பஞ்சாயத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.சீமான் கற்பனையில் எதை வேண்டுமானாலும் கூறலாம்
திருமாவளவன் திமுக கூட்டணியில் உறுதியாக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!