Skip to content
Home » அமைச்சர் பதவியை எடுக்கவோ… நீக்கவோ முதல்வருக்கு தான் உரிமை…. அமைச்சர் ரகுபதி

அமைச்சர் பதவியை எடுக்கவோ… நீக்கவோ முதல்வருக்கு தான் உரிமை…. அமைச்சர் ரகுபதி

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் காந்தி பூங்கா அருகே 2 கோடி ரூபாய் மதிப்பில் அறிவு சார் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் புதுக்கோட்டையில் நடந்த நிகழ்வில் சட்டத்துறை அமைச்சராக எஸ். ரகுபதி ஆட்சியர் மெர்சிரம்யா உள்ளிட்ட அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியசட்டத்துறை அமைச்சர்எஸ். ரகுபதி

தமிழக முதலமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் சந்தித்த பின்னர் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

அமைச்சரை பதவி நீக்கமோ பதவியில் இருந்து எடுக்கவோ முதலமைச்சருக்கு தான் உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த எஸ்.ரகுபதி ஏற்கனவே அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது
எனவே இது வரவேற்கத்தக்கது.

கடந்த அதிமுக ஆட்சி கால கட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மனு அளித்தால் அதனை விஜயபாஸ்கர் திட்டமிட்டே அந்தப் பகுதிகளுக்கு அனுமதி மறுத்து

வந்தார். அவர் தற்போது அரசியல் இன்றி அனைத்து பகுதிகளுக்கும் சமமாக அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்,தற்போதைய ஆட்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையாக பாரபட்சம் இன்றி நடத்தப்படுகிறது.

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி முறையாக செயல்பட்டு வருகிறது கடந்த ஆட்சியில் கொரோனாவை காரணம் காட்டி நிதி ஒதுக்கீடு செய்யாத சூழலிலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிதி ஒதுக்கீடு

செய்யப்பட்டு கல்லூரி திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் அந்த கல்லூரி செயல்படவில்லை என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

விஜயபாஸ்கர் மன நோயாளி போல் பேசி வருகிறார், அவர்கள் செயல்பாடுகள் அப்படித்தான் காட்டுகிறது,அவரது மனைவியும் குடும்பத்தினரும் அவருக்கு தேவையான சிகிச்சையை அளிக்க வேண்டும்.

திருச்சியில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி மத்திய அரசு விழாவாக இருப்பதால் அவர்கள் அழைப்பிதழை பாஜகவிற்கு மட்டும் அனுப்பி உள்ளதால் திமுக வினர் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை இதனால் பாஜகவினர் அந்த விழாவில் முதல்வர் பேசும்போது கூச்சல் இட்டனர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக உறுப்பினர்கள் தான் மொத்த உறுப்பினர்களே தமிழகத்தில் 7000 முதல் 8000 உறுப்பினர்கள் மட்டுமே பாஜகவினர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *