பிரதமர் மோடி கடந்த 27ம் தேதி மதுரை வந்தார். மதுரை பசுமலை ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடியை தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து சில ஊடகங்கள் சித்தரித்து செய்தி வெளியிட்டன. இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:
பிரதமரை தனியாக சந்தித்து 10, 15 நிமிடம் பேசினேன். தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் சந்திக்கவில்லை. அரசு பணியின் காரணமாகவே சந்தித்தேன். குறிப்பாக முதல்வர் வழங்கிய பணியின் நிமித்தமாக சந்தித்தேன். பிரதமருக்கும் எனக்கும் தனிப்பட்ட உறவு இருப்பதாக தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. இது தவறான செய்தி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.