தமிழக கவர்னர் ரவி தமிழக மக்களின் பண்பாட்டுக்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகிறார்கள். அவ்வப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான கவர்னரின் நடவடிக்கைகளை கண்டிப்பார். இந்த நிலையில் தான்அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் ரெய்டு நடத்தி, ரொக்க பணம் பறிமுதல் செய்தனர். சொத்துக்களையும் முடக்கினர்.
அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து முதல்வர் பொன்முடியுடன் தொலைபேசியில் பேசினார். கூட்டம் முடிந்து நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அமைச்சர் பொன்முடி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று, அமலாக்கத்துறை விசாரணையின்போது நடந்தது என்ன, இதற்கு பின்னணியில் உள்ள நபர் யார் என்பது குறித்து விளக்கமாக கூறினார்.