உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவரை விடுவித்தனர். மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி கூறியிருந்தனர்.
இதற்கிடையே இன்று காலை அமைச்சர் பொன்முடியிடம் , முதல்வர் மு.க. ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு பேசினார். பொன்முடியுடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.
மாலை 3.30 மணி அளவில் அமைச்சர் பொன்முடி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.