உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை ஐகோர்ட் தானாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, ஜெயசந்திரன், அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் குற்றவாளி என்றும் நாளை( வியாழன்) தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் கவர்னர் ஆர். என். ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு தகவல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என ஐகோர்ட் அறிவித்து விட்டதால் அவரை பதவியில் இருந்து நீக்குங்கள் என வலியுறுத்தி உள்ளாராம். எனவே இன்று அல்லது நாளை அமைச்சர் பொன்முடி பதவியை ராஜினாமா செய்யலாம் என்று கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.