அமைச்சர் நேருவின் இல்லம் மற்றும் அவரது மகன், சகோதரர்கள் இல்லம், நிறுவனங்களில் கடந்த 4 தினங்களுக்கு முன் அமலாக்கத்துறை ரெய்டு தொடங்கியது. 3 நாட்கள் நடந்த இந்த சோதனை சுமார் சென்னை, திருச்சி, கோவை உள்பட 20 இடங்களில் நடந்தது. அதைத்தொடர்ந்து அமைச்சர் நேருவின் தம்பி ரவிசந்திரனை இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் இன்று ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் நேருவின் தம்பி மருத்துவமனையில் அனுமதி
- by Authour
