Skip to content
Home » திருச்சியில் பெரியார் சிலைக்கு, அமைச்சர் நேரு மரியாதை

திருச்சியில் பெரியார் சிலைக்கு, அமைச்சர் நேரு மரியாதை

தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாளை முன்னிட்டு  திருச்சிமத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள  பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுக கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஏராளமான திமுகவினர்  இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில்  மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி , மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், கோ ட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன் ,துர்கா தேவி மற்றும் கழக நிர்வாகிகள் சேர்மன் துரைராஜ், டோல்கேட் சுப்பிரமணி , தொமுச மாநில செயலாளர் குணசேகர், குடமுருட்டி சேகர், லால்குடி நகர செயலாளர் துரை, கதிர்வேல் மோகன்தாஸ் இளங்கோ நாகராஜ் ராம்குமார் கனகராஜ் கலைச்செல்வி, பீ ஆர் பாலசுப்பிரமணியன் புஷ்பராஜ், கருணாமூர்த்தி தஸ்தா, சர்ச்சில் மாணிக்கம் மதனா கருமண்டபம் சுரேஷ் பரமசிவம் ,கருத்து கதிரேசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.