திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவுக்கு இன்று 71வது பிறந்த தினம். இதையொட்டி திருச்சி மாவட்ட திமுகவினர் மாவட்டம் முழுவதும் அமைச்சரின் பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
திருச்சி பொன்னகர் பகுதி திமுக. சார்பில் பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் பிராட்டியூர் சரணாலயம் முதியோர் இல்லத்தில் இன்று காலை அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் மோகன் தாஸ், மாவட்ட திமுக பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, அந்தோணிசாமி, தொ.மு.ச.பொதுச் செயலாளர் குணசேகரன், வட்டச் செயலாளர்கள் பி.ஆர்.பால சுப்பிரமணியன், மூவேந்திரன், தனசேகர், மாமன்ற உறுப்பினர் வெ.ராமதாஸ், பகுதி நிர்வாகிகள் பவுன்ராஜ், மோகன், சுகுமார், பீமநகர் சதீஷ்குமார், திருப்பதி, இலக்கிய அணி முகுந்தன், கருத்து கதிரேசன், அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு முதியோர்களுக்கு உணவு பரிமாறினர்.
அங்குள்ள முதியோர்களும், அமைச்சர் நேருவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கும்படி மோகன்தாசிடம் கேட்டுக்கொண்டனர்.