நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையினை அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார். முன்னதாக அமைச்சர் நேரு இன்று காலை கலைஞர் கருணாநிதி நினைவிடம் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திருச்சி மேயர் அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
