Skip to content
Home » கோவை கிரிக்கெட் ஸ்டேடிய பணி விரைவுபடுத்தப்படும்….. அமைச்சர் முத்துசாமி

கோவை கிரிக்கெட் ஸ்டேடிய பணி விரைவுபடுத்தப்படும்….. அமைச்சர் முத்துசாமி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1048 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி பத்திரத்தை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2.49 கோடி மதிப்பில் 5 கட்டிடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் வைப்பு நிதி வைக்கும் திட்டத்தின்
கீழ் 5.11 கோடி மதிப்பில்
1048 பயனாளர்களுக்கு பத்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. மக்களுடன் முதல்வன் திட்டத்தின் கீழ் இன்றிலிருந்து 66 நாட்களுக்கு முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் 218 கிராம பஞ்சாயத்துக்களில் இம்முகாம்களில் நடத்தபட உள்ளது. 15 துறைகள் இதில் பங்கேற்கும் . 44 விதமான பிரச்சனைகளுக்கு மனு அளிக்கலாம். 30 நாட்களுக்குள் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .

அவிநாசி மேம்பால பணிகளும், சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளும் விரைவுப்படுத்தப்படும் .   கோவை மேயராக இருந்த கல்பனா உடல்நிலை சரியில்லை என்று தான் ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது  ஊழல்புகார் கூறுவது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!