தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தற்போது மாநிலங்களவை எம்வியாக உள்ளார். கடந்த மாதம் தான் அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார். இந்த நிலையில் வரும் மக்களவை தேர்தலில் அவர் நீலகிரி(தனி) தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவார் என கூறப்படுகிறது.