கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை VRT பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்தார்.பின்னர் ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவர்களிடையே அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். அவர் பேசியதாவது:
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றால் நல்ல குரூப்பை தேர்வு செய்துவிடலாம் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றால் நல்ல கல்லூரியில் சேர்ந்து விடலாம் தமிழகத்தில் எந்த மாவட்டங்கள், இந்தியாவில் உள் மாநிலங்களில் எங்கு நல்ல கல்லூரிகள் எங்கு உள்ளது என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள
வேண்டும். இதற்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது மற்றவர்கள் சொல்வதை கேட்காமல் நீங்கள் என்ன படித்து சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும். நல்ல கல்லூரியில் சேர்ந்தால் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்புகளை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம் .இன்றைய காலகட்டத்தில் தமிழக முதலமைச்சர் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் சரி 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றாலும் சரி அனைவருக்கும் அரசு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் அதுதான் அரசின் கடமை என்ற நோக்கத்தோடு உள்ளார். எனவே மாணவச் செல்வங்களுக்காக தான் புதுமைப்பெண் திட்டம்,நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் போன்ற அனைத்து திட்டங்களையும் முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி,பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.