தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி டென்மார்க் நாட்டின் கல்வித் துறை இயக்குநரகம் சென்று, அத்துறை சார்ந்த இயக்குநர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மாணவர்கள் சார்ந்த திட்டங்கள் குறித்து அந்நாட்டு கல்வித்துறை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.
மேலும் புதுமைப்பெண் திட்டத்தால் தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும், உலகத்திற்கே முன்மாதிரியாகத் திகழும் முதலமைச்சர் காலை சிற்றுண்டித் திட்டத்தின் செயல்முறைகள் குறித்தும் அவர்களிடம் விளக்கினார். இதைக்கேட்ட டென்மார்க் கல்வித்துறை அதிகாரிகள், தமிழகத்தின் கல்வித்திட்டங்களையும், முதல்வரின் செயல்பாடுகளையும் பாராட்டினர்.