புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரம், கீழாத்தூர் கிராமத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.39.46 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள, விதை சேமிப்புக் கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை விரிவாக்க மையத்தினை, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் 11.01.2024 அன்று திறந்து வைத்து, வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கினார். உடன் இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.பெரியசாமி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் திருமதி.வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்), திருமதி.மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி), செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்துறை) திரு.செல்வம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags:அமைச்சர் மெய்யநாதன்