புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வேங்கிடகுளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். உடன் இந்நிகழ்வில் திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் த.தங்கமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் நா.கவிதப்பிரியா, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கோபாலகிருஷ்ணன், உள்பட பலர் உள்ளனர்.