புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு பணிநியமன ஆணைகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட கலெக்டர் மு.அருணா தலைமையில் இன்று (26.10.2024) வழங்கினார்கள். உடன் மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) (மதுரை) ஆ.ஜோதிமணி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கே.ஸ்ருதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோ.மணிகண்டன், வேல்முருகன் (தொ.வ), உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகை…மாற்றுத்திறனாளிக்கு பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…
- by Authour
