Skip to content
Home » பருவமழை….. மாணவர்கள், பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்க…. அதிகாரிகளுக்கு அமைச்சர் மகேஸ் உத்தரவு

பருவமழை….. மாணவர்கள், பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்க…. அதிகாரிகளுக்கு அமைச்சர் மகேஸ் உத்தரவு

  • by Senthil

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (17.10.2024)  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்  நடத்தினார்.

. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர்  சோ. மதுமதி , . மாநிலத் திட்ட இயக்குநர் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி) மருத்துவர் மா. ஆர்த்தி,  பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் முனைவர் கண்ணப்பன். தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ. நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள்:

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் வாயிலாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் பின்பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பருவமழையின் போது

பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் பழைய கட்டடங்களைப் பொதுப்பணித்துறை மூலம் அகற்றும் பணி காலாண்டுத் தேர்வு விடுமுறையின் பொது தொடங்கப்பட்டது. அப்பணிகளை விரைவுபடுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழைய மற்றும் பழுதடைந்துள்ள கட்டடங்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள் நிரம்பியுள்ள இடங்களுக்கு மாணவர்கள் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தகுந்த பாதுகாப்பு அறிவுரைகளை

வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி  உள்ள  நிலையில்,பள்ளிக் கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் பள்ளிக்கல்வித் துறையினால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாகக் காண்காணிக்க வேண்டுமெனவும் எல்லா வகையிலும் பள்ளியின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும்உறுதி செய்ய வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மாதிரி

பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று பள்ளியைப் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!