கோவை மாவட்டம், வால்பாறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறையில் ஆதிதிராவிடர் நலக்குழு அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றார். ஆதிதிராவிடர் மாணவ மாணவியர் விடுதியில் ஆய்வு செய்தார். வால்பாறையில் ஆதிதிராவிடர் நலக்குழு திருப்பூர் மாவட்டம் கோவை மாவட்டம் ஆதிதிராவிடர் அமைப்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்பு காந்தி சிலை வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆயிரம் பேர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்கள் அதன் பின்பு வால்பாறையில் உள்ள ஆதிதிராவிடர் பழங்குடியினர் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்தார், பெண்கள் விடுதிக்கு சென்று அங்கு சுகாதாரம்,கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, உணவு சரிவர வழங்கப்படுகிறதா என்றும் மாணவ மாணவிகளுக்கு குறை
உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார் தங்க விடுதியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார். உண்டு உறைவிட பள்ளி தங்கும் விடுதி, மகளிர் தங்கும் விடுதி, ஆண்கள் தங்கும் விடுதி போன்ற தங்கு விடுதிகளை ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டு ஆய்வு மேற்கொண்டார்
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நல குழு பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நல குழு மாநில செயலாளர் ஆர். கிருஷ்ணசாமி மற்றும் ஆதிதிராவிடர் நல அமைச்சர் மதிவேந்தன், மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் வால்பாறை நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர் மற்றும் வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி கலந்து கொண்டனர்.