திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனர் நேரு விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடைபெறும் 38வது மாநில மாஸ்டர் முதுநிலை தடகள போட்டி இன்று தொடங்கியது. பெல் நிர்வாக இயக்குனர் ராமநாதன் தமிழ்நாடு மாஸ்டர் தடகளபுரவலர் வெங்கடாசலம் கொடி ஏற்றி வைத்தார்
தமிழ்நாடு மாஸ்டர் தடகள புரவலர் உஜாகர் சிங் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் ஆயிரம் மீட்டர் பெண்கள் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த தடகள போட்டிகள் 30 வயது முதல் சுமார் நூறு வயது வரை
ஆண்களும் பெண்களும் கலந்து கொள்கின்றனர் இவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 300 மீட்டர், 500 மீட்டர், ஆயிரம் மீட்டர், 2000 மீட்டர், 3000 மீட்டர், 5000 மீட்டர் ஓட்ட பந்தயம் மற்றும் நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மெடல்களும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து பல நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கூத்தைப் பார் பேரூராட்சி செயலாளர் செல்வராஜ், கூத்தைப் பார் துணை தலைவர் பழனியாண்டி, பேரூராட்சி செயலாளர் தங்கவேல், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதிஉட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.