திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்த பணிகளை மேற்கொள்வதற்கான செயல் வீரர்கள் கூட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார் – இதே போல் திருச்சி மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்புரையாற்றிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி :
தமிழகம் முழுவதும் சென்று திமுகவினர் எப்படி செயல்படுகின்றனர் – கழகத்திற்காக எப்படி உழைக்கின்றனர் என்பதனை
பார்ப்பதற்கு அரிய வாய்ப்பாக இந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியை எனக்கு வழங்கியுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து தமிழகத்தில் முதல்முறையாக செயல்வீர்கள் கூட்டத்தை கூட்டியது திருச்சி தெற்கு மாவட்ட திமுக தான்.
செயல் வீரர்களாக இருக்கக்கூடிய நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பகுதியில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளார்கள் பொறுப்பில் இருக்கிறார்கள் என்கிற மொத்த விபர பட்டியலை எப்போதும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
55 ஆண்டு பொது வாழ்வில் இருக்கக்கூடிய ஒரு தலைவரை தலைமையாகக் கொண்ட இயக்கம் எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே திமுக தான்.
முதலமைச்சர் என்கிற மிகப்பெரிய பொறுப்பு இருந்தாலும் கூட திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் என்பதையே நம் முதல்வர் பெருமிதம் கொள்கிறார்.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களும் நாம் வெற்றி பெற இருக்கிறோம்.
பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களை பெற்றார் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் ராஜராஜ சோழன் அதேபோல் 40க்கு 39 இடங்களை பெற்று தந்தார் நம்மளுடைய முதலமைச்சர் ராஜேந்திர சோழன் ஆனால் மீண்டும் ராஜராஜ சோழனை போல் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகவே மாற உள்ளார் நமது முதலமைச்சர்.
கட்சி தேர்தல் என்றால் இரண்டு அணிகளாகவும் பொது தேர்தல் என்றால் ஒரணியாகவும் திரண்டு எதிரிகளை ஓட ஓட விரட்டும் ஒரே இயக்கம் திமுக தான்.
40க்கு 40 வெற்றி பெறுவதற்காக நாம் கடுமையாக உழைத்து முழுமையான வெற்றியை தேடி தந்தால் மட்டுமே நமது தலைவருக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும்