தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சாலியமங்களத்தில் புதிதாக கட்டப் பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார். இதில் அரசு கொறடா செழியன், எம். பிக்கள் கல்யாண சுந்தரம், ராமலிங்கம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்
தலைவர் கலைச் செல்வன், வேளாண்மை இணை இயக்குநர் நல்ல முத்து ராஜா, வேளாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் செல்லக் கண்ணு, திமுக ஒன்றியச் செயலர்கள் சுரேஷ், குமார், சன் சரவணன், அம்மாபேட்டை வேளாண் உதவி இயக்குநர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.