தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தனக்கு அன்புப் பரிசாக அளிக்கப்பட்ட 1350 புத்தகங்களைப் பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலகங்களுக்கு அறிவுப் பரிசாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வழங்கினார். உடன் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் கே.நந்தக்குமார், பொது நூலகத் துறை இயக்குநர் (பொறுப்பு) க.இளம்பகவத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.