நாகை மாவட்டத்திலும் கடந்த 3 தினங்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மீனவர்கள் கடந்த ஒருவாரமாக கடலுக்கு செல்லவில்லை. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நாகைக்கு, முதல்வரால் அனுப்பி வைக்கப்பட்டார்.
அமைச்சர் மகேஸ் நாகூர் நகரில் அமைந்துள்ள பெருமாள் குளத்தைப் பார்வையிட்டு, கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பெருமாள் கோவில் வடக்கு தெருவிலும் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டார்.
அமைச்சர் மகேசுடன் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ,
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ்,நாகை மாலி, ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.