திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பாக நகரச் செயலாளர் செல்வம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகோபால் ஆகியோர் தலைமையில் திருச்சி மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளான இன்று வெடி வெடித்து பேருந்து
நிலையத்தில் பேருந்துக்கு காத்திருந்த பயணிகளுக்கு கேக்குகள் வழங்கினர். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.