தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளைத் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மகேஸ் கூறியதாவது:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மதுவிலக்கு கருத்துக்களை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாநாட்டை நடத்துகிறார். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என அமைச்சர் முத்துசாமி ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் 31 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை ஏற்பதாக அவர்களிடம் எழுதிக் கொடுத்துள்ளோம். ஆசிரியர்கள் தங்களுடைய உரிமைகளை கேட்கின்றனர். இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வர் மூலமாக கண்டிப்பாக நல்ல முடிவு கிடைக்கும். மகாவிஷ்ணு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.