Skip to content

அமைச்சர் மகேஷ் தன் 10ம் வகுப்பு மார்க் சீட்-ஐ வௌியிட வேண்டும்…. கரூரில் பாஜ., கே.பி ராமலிங்கம்..

  • by Authour

அமைச்சர் அன்பில் மகேஷ் தனது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வெளியிட வேண்டும், அதன் பிறகு தேசியக் கல்விக் கொள்கை குறித்து பேச வேண்டும் என கரூரில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அளித்த பேட்டியில் சவால் விடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தேசிய அளவில் தொடங்கியது. அதில் முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி இணைந்தார். இதை எடுத்து கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை தொடக்க நிகழ்ச்சி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கரூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு மூத்த நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கேபி.ராமலிங்கம்,

தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அமைச்சர்களும், முதலமைச்சரும் புரிதல் இல்லாமல் தவறான தகவல்களை கூறி வருகிறார்கள். தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு நிச்சயமாக இல்லை. அந்தந்த மாநில மொழிகளுக்கு மட்டுமே முன்னுரிமை. அதுவே பாட மொழியாகவும் உள்ளது. இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. விருப்ப மொழியாக மாணவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று தான் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அதில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை தாய் மொழியாகக் கொண்ட மக்களும் வாழ்கின்றனர். அவர்களுக்கும் தங்களது தாய் மொழியை படிக்கும் உரிமை உள்ளது. அதைத்தான் நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அதை விட்டுவிட்டு புரியாமல் பேசுகிறார்கள்.

முதலில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வெளியிட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை குறித்து பேசுபவர்கள், தங்கள் தகுதி என்னவென்று முதலில் பார்க்க வேண்டும். பல்வேறு கல்வியாளர்களின் அறிவுரையை கேட்டு தான் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!