திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று மாலை திடீரென சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக வயிறு வலி ஏற்பட்டதால் அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்தாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல்நிலை சீரானதும் இன்று காலை அல்லது மதியம் அமைச்சர் மகேஸ் வீடு டிஸ்சார்ஜ் ஆவார் என கூறப்படுகிறது.