2002ல் சென்னை மாநகராட்சி கூட்டம் நடந்தபோது, அதிமுக உறுப்பினர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மா. சுப்பிரமணியன்(தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்) மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பாபு, திமுக கவுன்சிலர்கள் சிவாஜி, தமிழ்வேந்தன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இன்று அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்பட அனைவரயைும் விடுதலை செய்து கோர்ட் தீர்ப்பளித்தது.