Skip to content
Home » காவிரி விவகாரத்தில் சட்ட போராட்டம் உதவாது…..மத்திய அமைச்சர் குமாரசாமி திருச்சியில் பேட்டி

காவிரி விவகாரத்தில் சட்ட போராட்டம் உதவாது…..மத்திய அமைச்சர் குமாரசாமி திருச்சியில் பேட்டி

  • by Authour

காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்கக்கூடாது ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி….

மத்திய  கனரக தொழில்துறை அமைச்சரும் கர்நாடகா முன்னாள் முதல்வருமான குமாரசாமி இன்று தனி விமான மூலம் திருச்சி வந்தார்.  அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு  சென்று சாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் அவர் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அமைச்சர் குமாரசாமிக்கு கோவில் அர்ச்சகர்கள் மரியாதை செய்தனர்.

தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் குமாரசாமி கூறியதாவது:

ரங்கநாதரின் அருளை பெறுவதற்காக நான் இங்கு வந்தேன். தொடர்ந்து இங்கிருந்து சேலம் செல்ல உள்ளேன். அங்கு சேலம் உருக்காலையை ஆய்வு செய்கிறேன். 1970களில் தொடங்கப்பட்ட சேலம் உருக்காலை மூலம் ஆரம்பத்தில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அது நலிவடைந்துள்ளது. அதை மீண்டும் புத்துயிரூட்டி வேலைவாய்ப்பை பெருக்குவது அதனை வளர்ச்சி அடைய செய்வது உள்ளிட்டவை குறித்து ஆய்வு கூட்டம் நடத்த உள்ளோம்.

உரிய காலத்தில் மழை பெய்யும் பொழுது காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. மழை பொழிவு குறைவாக இருக்கும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. நல்ல மழைப்பொழிவு இருக்க வர்ண பகவான் அருள் பாலிக்க வேண்டும்.

காவேரி விவகாரத்தில் சட்ட போராட்டங்கள் உதவி செய்யாது.Give and take policy தான் இதற்கு தீர்வாக இருக்க முடியும். இரு மாநில விவசாயிகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.

காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்க கூடாது. நல்ல மழைப்பொழிவு இருக்க நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டது தமிழ்நாட்டின் அரசியல் விவகாரம் அதில் நான் கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *