தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ. கோவி.செழியன் கடந்த சில தினங்களுக்கு முன் உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். அவர் அமைச்சரான பின்னர் முதன் முதலாக இன்று தனது சொந்த தொகுதிக்கு வந்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிடத்தின் அடிப்படை நோக்கம். புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த எனக்கு உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்தியாவிற்கே ரோல் மாடலாக திராவிட மாடல் அரசு நடத்தும் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் என்னுடைய நன்றிகள்.உயர்கல்வித்துறையின் மேம்பாட்டுக்காக என்னுடைய செயல்பாடுகள் இருக்கும் .
இவ்வாறு அவர் கூறினார்.