Skip to content
Home » விபத்தில் சிக்கிய வாலிபர்…. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கே.என்.நேரு..

விபத்தில் சிக்கிய வாலிபர்…. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கே.என்.நேரு..

  • by Authour

திருச்சி மாவட்டம் த.பேட்டை,தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தொட்டியத்தில் இருந்து முசிறி செல்லும் சாலையில் டூவீலரில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கிக்கொண்டார். இதனை கண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு

உடனடியாக காரில் இருந்து இறங்கி விபத்தி சிக்கியிருந்த வாலிபரிடம் அவரது உடல் நலம் குறித்து விசாரித்து உடனடியாக அவரை மீட்டு காவல் துறை வாகனத்தில் சிகிச்சைக்காக  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.