தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் புதிய பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்தில் BS VI (4 நகர மற்றும் 6 புற நகர் ) புதிய பேருந்துகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே .என். நேரு நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பேருந்தில் அமைச்சர் நேரு மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் ஏரி பேருந்தின்
முன்னாள் சென்று இருக்கைகளை பார்வையிட்டார் பின்னர் பேருந்தில் அமர்ந்து சிறிது தூரம் பயணம் செய்த அமைச்சர் நேரு ஓட்டுனரிடம் பேருந்தை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி சென்றார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் ஆ .முத்துகிருஷ்ணன், மாமன்றஉறுப்பினர்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்.