தமிழக மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் (94) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது இறுதி நிகழ்வுகள் இன்று மாலை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட திமுக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘’விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களின் தாயார் ஆர்.அமராவதி அம்மாள் அவர்கள் தனது 94 வயதில் அகவை முதிர்வால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22 /12/ 2023 வெள்ளிக்கிழமை மாலை விருதுநகர் இராமமூர்த்தி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.