Skip to content
Home » குழுமணி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு…. செவிலியர்கள் பரபரப்பு

குழுமணி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு…. செவிலியர்கள் பரபரப்பு

  • by Authour

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நேற்று திருச்சி வந்தார். இன்று முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு திருச்சியில் தங்கிய அமைச்சர் மா.சு. இன்று அதிகாலை வழக்கம் போல நடைபயணம் மேற்கொண்டார். அவர் திருச்சி  குழுமணி  வரை நடந்தே சென்றார். அப்போது அங்கு  உள்ள அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தை பார்த்த  அமைச்சர் நேராக ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் சென்றார்.

டீ சர்ட், சார்ட்ஸ் அணிந்து நடைபயிற்சி உடையில் அமைச்சர் வந்திருப்பதை அறிந்த அங்குள்ள நர்சுகள் மற்றும் ஊழியர்கள் முதலில் யாரோ என நினைத்தனர். பின்னர் வந்திருப்பவர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.ச. என்பதை அறிந்து  அவருக்கு வணக்கம் கூறி வரவேற்று பரபரப்படைந்தனர்.

அவர்களிடம் அமைச்சர் மா.சு. சிறிது நேரம் பேசினார். மருந்து தட்டுப்பாடு உள்ளதா, தினமும் எவ்வளவு நோயாளிகள் வருவார்கள், டாக்டர்கள் எத்தனை மணிக்கு வருவார்கள். போதுமான மருத்துவ உபகரணங்கள் உள்ளதா என கேட்டார். அதற்கு நர்சுகள் மற்றும் ஊழியர்கள் பதில் அளித்தனர். பின்னர் அங்கு வந்திருந்த ஒரு சில நோயாளிகளிடமும் விசாரித்தார். சிறிது நேரம் மருத்துவமனையை ஆய்வு செய்து விட்டு மீண்டும் அவர் நடைபயணத்தை தொடர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *