புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் வீடுகள் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கலெக்டர் கவிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
