தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்(78), இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.