கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் அமைச்சர்கள் உதயநிதி, எ.வ. வேலு ஆகியோர் கருணாபுரத்தில் இறந்தவர்கள் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி செலுத்தினர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு அமைச்சர் உதயநிதி நிதி வழங்கினார்.
பின்னர் அமைச்சர் எ.வ. வேலு நிருபர்களிடம் கூறியதாவது:
விஷ சாராயம் இருக்க கூடாது என்பது தான் அரசின் நோக்கம். இந்த சம்பவத்தை தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விஷ சாராயம் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனில் கவனம் செலுத்தப்படும். சிபிசிஐடி அறிக்கை வந்ததும் முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்க்கட்சியினர் வந்து ஒரு குறிப்பிட்ட மருந்து அரசு ஆஸ்பத்திரிகளில் இல்லை என்று கூறி உள்ளனர். அவர்கள் சொன்ன மருந்து எல்லா அரசு ஆஸ்பத்திரிகளிலும் உள்ளது. அது தான் இந்த மருந்து(அப்போது மருந்தை அமைச்சர் காட்டினார்) மருந்து தேவையான அளவு உள்ளது. மருந்துகள் இல்லை என்பது தவறான குற்றச்சாட்டு. யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.