சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் அமைச்சர் துரை முருகன் பேசினார். அவர் பேசியதாவது:
எனது சமாதியில் , கோலபுரம் விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதினாலே போதும். (இவ்வாறு அவர் பேசியபோது அவரது நா தழுதழுத்தது. கண்ணீர் மல்கும் நிலையில் அவர் கூறிய இந்த வார்த்தைகளால் சபை அமைதியானது. பின்னர் அவர் சகஜ நிலைக்கு வந்து பேச்சை தொடர்ந்தார்) எதிர்க்கட்சி உறுப்பினர்களும் என் மீது காட்டும் மரியாதைக்கும் நான் நன்றிகடன் பட்டுள்ளேன். சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி – குண்டாறு திண்டத்தை நாங்கள் விட்டு விடவில்லை. பருவமழையை எதிர்கொள்ள சென்னைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.