அமைச்சர் துரைமுருகனின் வீடு சென்னை, வேலூர் காட்பாடி ஆகிய இடங்களில் உள்ளது. சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள வீட்டில் அமைச்சர் துரைமுருகன் வசிக்கிறார். காட்பாடியில் அமைச்சரின் மகனும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த் வசிக்கிறார்.
தற்போது கதிர் ஆனந்த அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காட்பாடியில் உள்ள கதிர்ஆனந்த் வீட்டில் 10க்கும் மேற்பட்ட ED அதிகாாரிகள் சோதனை நடத்த வந்தனர். அங்கு கதிர் ஆனந்த் இல்லாததால் சிறிது நேரம் வெளியிலேயே இருந்தனர். பின்னர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். அமலாக்கத்துறை சோதனையை சட்ட ரீதியாக எப்படி சந்திப்பது என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அங்கிருந்து நேராக கோட்டைக்கு வந்தார். அங்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.