தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவரது மகள் பாரதி ( 55). இவர் தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த நான்காம் தேதி அதிகாலையில் லத்தேரி அருகே பாரதி ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
உடனே இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் பாரதி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.