தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நாளை டில்லியில் நடைபெற உள்ள நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமித்ஷா, நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாளைய எம்.பிக்கள் கூட்டம், புதிய அமைச்சரவை பதவியேற்பு, யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது, யார் யாரை நீக்குவது என்பது குறித்து பேசப்பட்டது. தோல்வி அடைந்த அமைச்சர்களுக்கு பதவி வழங்க வேண்டாம் என்பது குறித்தும் பேசப்பட்டது. எம்.பிக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் யாரை மந்திரியாக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் எடுக்கப்படும் முடிவை மோடியிடம் தெரிவிப்பார்கள். இன்று மாலை பாஜக தலைவர் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.