அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட நிலைபாட்டை எடுத்தனர்..இதையடுத்து இந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட தலைமை நீதிபதிக்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர்.
இதன் அடிப்படையில் தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி சி.வி. கார்த்திகேயனை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று மதியம் நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாட உள்ளதால் இந்த வழக்கை நாளைக்கு விசாரணைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதி, இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்தால் வரும் சனிக்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தார்.