ஈரோடு காவிரிக்கரை பகுதியில் அமைந்துள்ள கலைத்தாய் கலை பயிற்சிப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்றார். அங்கு
மாணவர்களின் தப்பாட்டம், சிலம்பாட்டம், சுருள்வாள் போன்ற வீர விளையாட்டுகளையும், பார்வையிட்டார்.
நீர் மேலாண்மையை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய தட்டு விளையாட்டுகளையும் பார்வையிட்டு பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம் இருந்து பறை இசைக்கவும் அமைச்சர் மகேஸ் கற்றுக்கொண்டார். பின்னர் பறை இசை அடித்து மாணவர்களை அமைச்சர் உற்சாகப்படுத்தினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,அப்துல் சமது, கழக நிர்வாகிகள் மணி, மனோகர், கங்காதரன், நிறுவன தலைவர்மாதேஸ் ஆகியோரும் மாணவர்களும்,
விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் கலந்து கொண்டார்கள்.